பழைய மாணவர் சங்கம்

 

சாவகச்சேரி இந்துக் கல்லூரி

‘அதி சிறந்த பாடசாலையாக உயர்த்துவதற்கான உச்சமான ஒத்துழைப்பு’ என்ற தூரநோக்கையும், பழைய மாணவர் ஆசிரியரின் உறவை வளர்ப்பதன் ஊடாக வாண்மைத்துவ ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கி ஒருங்கிணைந்து பாடசாலையை வளர்த்தல் என்னும் பணிக்கூற்றினையும்தனது தாரக மந்திரமாகக்கொண்டு கல்லூரிக்கு பெரிதும்பக்கபலமாக இருப்பது பழைய மாணவர்களே என்றால்அது மிகையாகாது

இப்பாடசாலை அன்னையின் சிறப்பியல்புகளையும், பாடசாலையின் பெருமைகளையும், மேம்படுத்துவதற்காக அதிபருக்கு ஆலோசனையும், ஒத்துழைப்பும் வழங்கல். பாடசாலையின் நடவடிக்கைகளுக்கான நிதி மூலங்களையும் வளங்கள், வசதிகளையும் அதிபருக்கூடாக கிடைக்கச் செய்தல். பாடசாலையின் உறுப்பினர்களிற்கிடையில் உணர்வு பூர்வமான நெருங்கிய உறவை மேம்படுத்தல் போன்ற நோக்கங்களையும் கொண்டு நீண்ட காலமாக இச்சங்கம் இயங்கி வருகிறது.

ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் ஆண்டுதோறும் அலுவலர்கள் உட்பட நிர்வாக சபை பொதுச்சபையால் தெரிவு செய்யப்படும்’. சங்கத்தின் அலுவலர்களாக தலைவர், உபதலைவர், பொருளாளர், செயலாளர், உப செயலாளர் உட்பட 15  நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். தலைவராக இப்பாடசாலையின் அதிபரும், உப தலைவராக இப்பாடசாலையின் பிரதி அதிபரும் (நிர்வாகமும்) பதவி வழி பொறுப்பு வகிப்பர்.  இவர்களுடன் ஏழு பேருக்கு மேற்படாத போசகர் குழுவும் இயங்கும்

நாட்டின் தூர பிரதேசத்தில் அல்லது பிற நாடுகளில் கிளைச்சங்கங்களை தலைவரின் அனுமதியுடன் உருவாக்க முடியும். கிளைச்சங்கங்கள் செயற்றிட்டங்கள், நிதி வசூலிப்புக்கள் தொடர்பான அறிக்கைகளைத் தாய்ச்சங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். கிளைச் சங்கங்களின் போசகர்களில் ஒருவராக அதிபர் செயற்படுவார்

இச்சங்கத்தின் பணிமனை பாடசாலை வளாகத்தில் அமைந்திருக்கும். பழைய மாணவர்களும் ஆசிரியர்களும் எந்நேரத்திலும் அதிபர்/தலைவரை  அணுகுவதன் மூலம் பணிமனையில் தமக்குரிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். எமது கல்லூரியின் வளர்ச்சிக்கான பல வேலைத்திட்டங்கள் செய்ய வேண்டி இருப்பதனால் அதுதொடர்பாக கலந்தாலோசிக்கவும் முடிவுகள் எடுக்கவும் இப்பணிமனையானது எமக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.

சங்கத்தின் வலைத்தளம், சமூகவலைத்தளம், மின்னஞ்சல் என்பன சங்கத்தின் நிர்வாக சபையின் அனுமதியுடன் நிர்வாகசபையின் அங்கத்தவராலே நிர்வகிக்கப்படும். அதற்காக குழு ஒன்று தலைவரால் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. உங்களிடம் உள்ள பழைய மாணவர் சம்பந்தமான தகவல்களை எங்களுக்கு தந்து உதவ முடியும். மேலும் பழைய மாணவர் சங்க விமர்சனங்களையும் எமக்கு மின்னஞ்சல் ஊடாக அல்லது தொலைபேசி ஊடாகவும் தெரிவிக்கலாம். இதன் கீழே எமது அனைத்து தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளது.

 

 “கல்லூரி அன்னைக்காய் கரம் கோர்ப்போம் உறுதியுடன்”

 

Emailmembership.chc@gmail.com

WhatsApp: +9471 3 339 669

Facebook Page:  https://www.facebook.com/chcosaofficial/

Twitter Profile: https://twitter.com/chcosaofficial

Linkedin Page: https://www.linkedin.com/company/chcosa

செயற்பாடுகள்

 

பழைய மாணவர் சங்க

1970 இல்இக்கல்லூரியின்பிரதான கட்டிடத்தின்கூரைவேலையினை U.S.சின்னத்துரை அவர்கள்பொறுப்பேற்றுக்கொண்டார்‌. இக்காலப்பகுதியில்ஓய்வுநிலை உபஅதிபர்திரு. S.K.செல்லையா, திருமதி.சி.சிவநாராயணமூர்த்தி, பண்டிதர்வேலுப்பிள்ளை ஆகியோர்கட்டிட வளர்ச்சிக்கு விசேட நிதி உதவியினை வழங்கியிருந்தனர்‌.

1971 இல்பழைய மாணவர்சங்க உதவியுடன் நிறைவடைந்திருந்த விஞ்ஞான ஆய்வுகூடம்அப்போதைய நிதியமைச்சராக இருந்த டாக்டர்‌ N.M பெரேரா அவர்களினால்திறந்து வைக்கப்பட்டதுஇக் காலப்பகுதியில்திரு.பூ.வெற்றிவேலு அவர்கள்செயலாளராகப்பணியாற்றினார்‌. பழையமாணவன்‌  சி.நவரத்தினம்கல்லூரிக்கு இரும்புக்கேற்றையும்‌, மதிலுக்கு வர்ணம்பூசுவதற்கும்உதவி செய்தார்‌.

1994 காலப்பகுதியில்‌ பாடசாலை விஸ்தரிப்போடு இலாபச்சீட்டிழுப்பு மூலமாக நிதி சேகரித்து அயற்காணி கொள்வனவு செய்வதற்கு முயற்சி செய்யப்பட்டது.

அதிபர்‌.திரு.. சந்திரசேகராவின்முயற்சியால்கனடாவில் பழைய மாணவர்சங்கம்உருவாக்கப்பட்டது.

1998 ஆம்ஆண்டு பழையமாணவர்சங்கம்50 லட்சத்திற்கு அயற்காணியைக் கொள்வனவு செய்து பாடசாலைக்கு கையளித்தது. (11 பரப்புக்காணி)

இக்காலப்பகுதியில்பாடசாலை அபிவிருத்திச்சங்கமும்பழைய மாணவர்சங்கமும்இணைந்து 5 வகுப்பறைகொண்ட “L” மண்டபம்அமைத்தது.

இக்காலப்பகுதியில்பழைய மாணவன்திரு.நா..பூபாலசிங்கம் அவர்களினால்பிரதான வாயில்முகப்பு அமைக்கப்பட்டது. கிரிக்கெட்அபிவிருத்தி நிதியத்தை தோற்றுவிப்பதில்பழையமாணவர்சங்கமும்பாடசாலை அபிவிருத்திச்சங்கமும்முன்னின்று உழைத்தன

பாடசாலையிலிருந்து விலகிய மாணவர்களுக்குக்கணினிப்பயிற்சி நெறியினை பழைய மாணவர்சங்கம்தொடர்ந்து நடாத்தி வருவதும்குறிப்பிடத்தக்கது. மேலும்இக்காலப்பகுதியில்பழையமாணவன் .தெய்வேந்திரம்முப்பது ஆயிரம்ரூபாவை கணினிகள்வாங்க அன்பளிப்புச்செய்தார்‌.

2003 காலப்பகுதியில்இச்சங்கத்தின்நிதியுதவியினால்‌ “B” மண்டபம்செப்பனிடப்பட்டது

2004 இல்கல்லூரி தனது நூற்றாண்டு விழாவினைச்சிறப்பாகக் கொண்டாடியது.

இக்காலப்பகுதியில் மாணவர்‌ நன்மை கருதி புத்தக நிலையம்ஆரம்பித்தல்‌. நூற்றாண்டு ஞாபகார்த்த தபால்தலை வெளியிடுவதில்பங்காற்றியமை நூற்றாண்டு ஞாபகார்த்தமாக அப்பியாசக்கொப்பி, ரீசேட்‌, தொப்பி என்பனவற்றை வெளியீடு செய்தமை பிரதானமான செயற்பாடுகளாக இருந்தன

2008 இல்கல்லூரிப்பூங்காவிற்குத் தேவையான 100 அழகிய பூச்சாடிகளை இச்சங்க உறுப்பினர்திரு. கா.குணசீலன்தந்தையின்‌ ஞாபகார்த்தமாக வழங்கினார்‌.

விளையாட்டு அணிக்கு கோல உடை வழங்கியமை, விளையாட்டு மைதானத்தைச்சூழத் தடுப்புச்சுவர்எழுப்பப்பட்டு 300 டிராக்டர்லோட்மண்பறிக்கப்பட்டது.

2008 – 2009 காலப்பகுதியில்பழைய மாணவர்சங்க பிரித்தானியக்கிளையுடன் சேர்ந்து 3 1/4 பரப்புக்காணியைக்கொள்வனவு செய்து பாடசாலைக்குக் கையளித்தது.

2009-2010 காலப்பகுதியில்‌ கொழும்பு பழைய மாணவர்சங்கத்தின்உதவியுடன்ஜேர்மன்ஜனநாயகக்குடியரசு தூதராலயம்‌ 17 இலட்சம்பெறுமதியான விளையாட்டுத்துறை உபகரணங்களை வழங்கியமை

பழைய மாணவன்தி..கமலேஸ்வரன்‌ 700 பிளாஸ்டிக்கதிரைகள் வழங்கியமைVMK நிறுவனம்‌ 50 பிளாஸ்டிக் கதிரைகள்வழங்கியமை குறிப்பிடத் தக்கவையாகும்.

2012 காலப்பகுதியில் பிரான்ஸ் ‌ பழைய மாணவர் சங்கத்தின் 500,000.00 (ஐந்து லட்சம்) நிதி உதவியில் பாடசாலையின் பிரதான மண்டபம் (அருணாச்சலம் மண்டபம்) விஸ்தரித்து கூரை போடப்பட்டுள்ளது.

2016 காலப்பகுதியில் கனடா பழைய மாணவர் சங்கத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட சிற்றுண்டிச் சாலை திறந்து வைக்கப்பட்டது.