பழைய மாணவர் சங்கம்

 

சாவகச்சேரி இந்துக் கல்லூரி

ஆளுமையும் அறிவாற்றலும்உள்ள நற்பிரஜைகளை உருவாக்குவதன்மூலம்இலங்கையில்ஒரு முன்னணிப்பாடசாலையாக விளங்க வைத்தல்‌, தேசிய கல்விக்கொள்கைகளுக்கு ஏற்ப சகல மாணவர்களையும்வழிப்படுத்தி சைவத்தமிழ்மரபுகளையும்விழுமியங்களையும்பேணி நவீனத்துவத்திற்கு முகங்கொடுக்கும்வகையில்அதற்கான பலத்தையும்அர்ப்பணிப்பையும்அவர்களுக்கு வழங்குதல்என்ற தூரநோக்கையும்பணிக்கூற்றினையும்தனது தாரக மந்திரமாகக்கொண்டு விளங்கும்கல்லூரிக்கு பெரிதும்பக்கபலமாக இருப்பது பழைய மாணவர்களே என்றால்அது மிகையாகாது.

இச்சங்கம்‌, 1957 இல்தனது முதற்பயணத்தை ஆரம்பித்தது. 1970 இல்இக்கல்லூறியின்பிரதான கட்டிடத்தின்கூரைவேலையினை U.S.சின்னத்துரை அவர்கள்பொறுப்பேற்றுக்கொண்டார்‌. இக்காலப்பகுதியில்ஓய்வுநிலை உபஅதிபர்திரு. S.K.செல்லையா, திருமதி.சி.சிவநாராயணமூர்த்தி, பண்டிதர்வேலுபபிள்ளை ஆகியோர்கட்டிட வளர்ச்சிக்கு விசேட நிதி உதவியினை வழங்கியிருந்தனர்‌.

 

பாடசாலை வரலாறு

 

சாவகச்சேரி இந்துக் கல்லூரி

சாவகச்சேரி நகரிலொரு சைவத் தமிழ்க் கலவன் பாடசாலையை திரு.வி.தாமோதரம்பிள்ளை (1863-1946) அவர்கள் 1900 ஆம் ஆண்டளவில் ஆரம்பித்தார். 1902 இல் திரு.பரமு அவர்களால் சங்கத்தானையில் 14 பரப்புக் காணி பாடசாலை அமைக்க தர்மசாசனம் செய்து வழங்கப்பட்டது. 1904 இல் இருந்து பாடசாலை முறையாக செயற்பட ஆரம்பித்தது. திரு.எஸ்.கே.கந்தசாமி அவர்கள் முதற்றலைமையாசிரியராக செயற்பட்டார்.

1905 இல் பாடசாலை சங்கத்தானைக்கு இடமாற்றப்பட்டு, 1907 இல் துவிபாஷா பாடசாலையாக செயற்பட ஆரம்பித்தது. எனினும் 1907 இல் இருந்து 1910 வரை அரசினர் நன்கொடை இன்றி பாடசாலை செயற்பட்டது. 1908 இல் தமிழ்ப் பாடசாலை சங்கத்தானை கந்தசாமி கோயிலின் பின் வீதிக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் தற்போதைய பழைய இடத்துக்கு 1926 இல் கொண்டுவரப்பட்டது. 1921 இல் அரசினர் நன்கொடையுடன் ஆங்கிலப் பாடசாலை திரு.வி.தாமோதரம்பிள்ளையால் ஸ்தாபிக்கப்பட்டது. 1922 இல் E.S.L.C வகுப்பு ஆரம்பிக்கப்பட்டதுடன் அரசினர் நன்கொடையும் பெறப்பட்டது.ஆங்கிலப் பாடசாலை யாழ்ப்பாணம் இந்துக் கலூரிச்சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1937 இல் தமிழ்ப் பாடசாலையும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச்சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1957 இல் பழைய மாணவர் சங்கம் அமைக்கப்பட்டதுடன் தமிழ்ப் பாடசாலை ஆங்கிலப் பாடசாலையுடன் இணைக்கப்பட்டது.