பொதுக்கூட்டமும் நிவாகத்தெரிவும்

இன்றைய தினம் (12.01.2025) எமது கல்லூரியின் பொதுக்கூட்டம் கல்லூரியின் அருணாசலம் மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. பாடசாலை அதிபர் திரு சர்வேஸ்வரன் அவர்களினால் தலைமை உரை நிகழ்த்தப்பட்டது. செயலாளரினால் கடந்த பொதுக்கூட்ட அறிக்கை, மற்றும் செயற்பாட்டு அறிக்கை வாசிக்கப்பட்டது. கணக்கறிக்கையினை பொருளாளர் சபைக்கு வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, மீண்டும் தலைவரினால் பழைய மாணவர் பங்களிப்புடன் அமைக்கப்பட உள்ள 46 வகுப்பறை கட்டிட நிர்வாக விடையம் […]

பொதுக்கூட்ட அறிவித்தல் 2025

எமது கல்லூரியின் பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டமானது 12.01.2025 ஞாயிற்றுக்கிழமை மு.ப 09.30  மணியளவில், கல்லூரியின் அருணாச்சலம் மண்டபத்தில் நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   2025 ம் ஆண்டுக்குரிய சங்க நிர்வாகமானது வேட்பு மனு அடிப்படையில் தெரிவுசெய்யப்படவுள்ளது. எனவே அதன் வேட்பு மனுக்களைக் கல்லூரியின் அதிபர் அலுவலகத்தில் அல்லது இவ் இணையத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளலாம். வேட்புமனு விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ள. 2025 AGm Nomination Form

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

புலர்ந்திருக்கும் புதியதொரு ஆண்டில் எங்கள் உறவுகள் அனைவரையும் வாழ்த்துவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. எமது செயற்பாடுகளின் தடங்களை திரும்பிப் பார்ப்பதற்கும், முன்வைக்க இருப்பவைகளின் கனதியை வரையறுத்துக்கொள்ளவும் இக் கலண்டர் ஆண்டுகள் எங்களில் செல்வாக்கு செலுத்துகின்றது. எமது மண், எமது உறவுகள், எமது தேவைகள், எமது திருப்திகள், எங்களால் இக் கல்லூரிச் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிவைகள் இவை எவற்றிலும் எவ்வித மாற்றங்களும் எமது தலையீடு இன்றி […]

சங்கமம் 2024 வருகைப் பதிவுப் படிவம்

சங்கமம் 2024 (19.10.2024, மாலை 6.00 மணிக்கு) வருகைப் பதிவுப் படிவம் https://ee.kobotoolbox.org/x/eC7Sjh6I ஆற்றல் மிக்க அன்னையின் பிள்ளைகள் நாம் அனைவரும் நம் அன்னைமடியில் அக்டோபர் 19, 2024 ஒருமாலைப்பொழுதில் சங்கமிப்போம்……. இப் படிவம் 15.10.2024 நள்ளிரவு 12.00 மணிவரைக்கும் செயல்வலுவில் இருக்கும் என்ற முக்கிய விடயத்தினையும் கவனத்திற்கொள்ளவும். நன்றியுரைத்தல், இராப்போசனம் மற்றும் விசேட இசை நிகழ்வாக ZEE தமிழ் தொலைக்காட்சி சரிகமப […]

எமது கல்லூரியின் கணனிக் கூடங்களுக்குரிய உபகரணம் கையளிப்பு

எமது கல்லூரியின் கணனிக் கூடங்களுக்குரிய 35 முழுமையான கணனிகள், 45 கணனி மத்திய செயலாக்க அலகுகள், 10 மடிக்கணனிகள் உள்ளிட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சாதனங்களை (12.5 மில்லியன் LKR பெறுமதியில்) எமது சுவிஸ் பழைய மாணவர் சங்கம் வழங்கியுள்ளது. அவைகள் முழுமையாக நிறுவப்பெற்று செயலாற்ற ஆரம்பித்துள்ளன. இச் செயற்திட்டத்தினை முன்னெடுத்த சுவிஸ் பழைய மாணவர் சங்க தலைவர் திருமிகு சிவநேசன் விநாசித்தம்பி […]

மைதானத்திற்குரிய உயர் அழுத்த நீர் விசிறித் தொகுதி கையளிக்கப்பெற்றுள்ளது.

தன்னார்வமான பழைய மாணவர் நியூசிலாந்து வாழ் பொறியியலாளர் றமணன் ஜெயவீரசிங்கம் – உயர்தரம் 2006 அவர்களது அனுசரணையிலும், பங்கேற்பிலும் எமது கல்லூரி விளையாட்டு மைதானத்திற்குரிய உயர் அழுத்த நீர் விசிறித் தொகுதி நிர்மாணிக்கப்பெற்று 08.08.2024 கல்லூரிக்கு கையளிக்கப்பெற்றுள்ளது. (1.3 Million LKR)

மானிப்பாய் இந்துக் கல்லூரி வெற்றிபெற்றது

இன்றைய சாவகச்சேரி இந்து, மானிப்பாய் இந்து பழைய மாணவர்களுக்கு இடையிலான சினேக பூர்வ 20க்கு 20 துடுப்பாட்ட போட்டியில் மானிப்பாய் இந்து 24 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. வாழ்த்துகள் மானிப்பாய் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள்