1.principal-n.sarvesvaran

திரு ந. சர்வேஸ்வரன்

அதிபர் (2015 - Present)

சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க இணைய தளத்தை 2021 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைப்பதையிட்டு ஆனந்தமடைகின்றேன். இன்றைய தகவல் தொடர்பாடல் யுகத்தில் பழைய மாணவர்களை கல்லூரியுடன் இணைக்கும் தகவல் தொடர்பு பாலமாக செயற்பட்டு கல்லூரியின் வளர்ச்சியில் இவ் இணையத்தளம் அளப்பரிய பங்களிப்பை வளங்குமென்பது திண்ணம். இதன் உருவாக்கம் மற்றும் செயற்படுத்தலின் பின்னே நிற்கும் தொழில்வாண்மையாளர் பழைய மாணவர்களுக்கு நன்றிகள்.

‘வாழ்க நம்திரு வாழ்க நம் கலை, நாளும் நன்மையும் உண்மையும் ஓங்கவே”

பாடசாலை வரலாறு

 

சாவகச்சேரி இந்துக் கல்லூரி

நிறுவுனர் திரு.வி.தாமோதரம்பிள்ளை

சாவகச்சேரி நகரிலொரு சைவத் தமிழ்க் கலவன் பாடசாலையை திரு.வி.தாமோதரம்பிள்ளை (1863-1946) அவர்கள் 1900 ஆம் ஆண்டளவில் ஆரம்பித்தார். 1902 இல் திரு.பரமு அவர்களால் சங்கத்தானையில் 14 பரப்புக் காணி பாடசாலை அமைக்க தர்மசாசனம் செய்து வழங்கப்பட்டது. 1904 இல் இருந்து பாடசாலை முறையாக செயற்பட ஆரம்பித்தது. திரு.எஸ்.கே.கந்தசாமி அவர்கள் முதற்றலைமையாசிரியராக செயற்பட்டார்.

1905 இல் பாடசாலை சங்கத்தானைக்கு இடமாற்றப்பட்டு, 1907 இல் துவிபாஷா பாடசாலையாக செயற்பட ஆரம்பித்தது. எனினும் 1907 இல் இருந்து 1910 வரை அரசினர் நன்கொடை இன்றி பாடசாலை செயற்பட்டது. 1908 இல் தமிழ்ப் பாடசாலை சங்கத்தானை கந்தசாமி கோயிலின் பின் வீதிக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் தற்போதைய பழைய இடத்துக்கு 1926 இல் கொண்டுவரப்பட்டது. 1921 இல் அரசினர் நன்கொடையுடன் ஆங்கிலப் பாடசாலை திரு.வி.தாமோதரம்பிள்ளையால் ஸ்தாபிக்கப்பட்டது. 1922 இல் E.S.L.C வகுப்பு ஆரம்பிக்கப்பட்டதுடன் அரசினர் நன்கொடையும் பெறப்பட்டது.ஆங்கிலப் பாடசாலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச்சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1937 இல் தமிழ்ப் பாடசாலையும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச்சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1957 இல் பழைய மாணவர் சங்கம் அமைக்கப்பட்டதுடன் தமிழ்ப் பாடசாலை ஆங்கிலப் பாடசாலையுடன் இணைக்கப்பட்டது.

1934 இல் C பிரிவுக் கல்லூரியாகி S.S.C வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. 1945 இல் V பிரிவுக் கல்லூரியாகி S.S.C வகுப்பிற்கு விஞ்ஞானக் கல்வி போதிக்கப்பட்டது. 1949 இல் யு பிரிவுக் கல்லூரியாகி H.S.C வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. 1962 இல் அரசாங்கம் பாடசாலையைப் பொறுப்பேற்றது. 1979 இல் தேர்தற் தொகுதிக்கொன்று என்ற வகையில் மத்திய மகா வித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டது. 1989 இல் (29.08.1989) இருந்து “இந்து ஆரம்பப் பாடசாலை” என்ற பெயருடன் ஆரம்பப் பிரிவு தனி பாடசாலையாக இயங்கத் தொடங்கியது. ஆரம்ப்பப் பிரிவின் கட்டடத் தொகுதிகள் 03.09.2009 அன்று இந்துக்கல்லூரியால் பொறுப்பேற்கப்பட்டன. 1993 இல் (05.02.1993) தேசிய பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது. 15.07.2013 அன்று க.பொ.த உ/த தொழிநுட்பப் பாடத்துறை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அன்று 1B SUPER பாடசாலையாகவும் தரமுயர்த்தப்பட்டது. 2017 இல் கோட்டக்கல்விப் பணிமனையாக பயன்படுத்தப்பட்டு வந்த ஆரம்பப்பிரிவு கோட்டக் கல்வி காரியாலயத்தின் இடமாற்றத்தின் பின் முழுமையாக பாடசாலையால் பொறுப்பேற்கப்பட்டது. 2018 இல் காட்சிகாண் படத்துடன் கூடிய பஸ்தரிப்பிடம் அமைக்கப்பட்டது. 12 அறைகள் கொண்ட 3 மாடி கட்டடம் புதிதாக அமைத்து திறக்கப்பட்டது.

நீர்‌ நிலை

எம்‌ செயல்‌ யாவரையும்‌ குளிரச்‌ செய்யும்‌ அன்பை அடிப்படையாகக்‌ கொண்டிருக்க வேண்டும்‌. அன்பு இணைக்கும்‌ பசை. அதன்‌ பயன்‌ மாணவர்‌ ஆசிரியர்‌ அதிபர்‌ மனமொன்றிணைந்த செயற்பாடு.

 தாமரை மலர்‌

அப்பொழுது இதுவரை குவிந்து மொட்டாய்‌ இருந்த இதயத்தாமரை மலர்கின்றது. மொட்டு தன்னளவில்‌ மட்டும்‌ வளர்ச்சி, மலர்‌ தானும்‌ பொலிந்து தன்னையும் அடுத்தவரையும்‌ மகிழ வைப்பது அது மட்டுமல்ல எப்பக்கத்திலிருந்துவரும்‌ ஒளிக்கதிர்களையும்‌ ஏற்கும்‌ சிறப்பு வாய்ந்தது. அறிவு எங்கிருந்துவரினும்‌ நட்புரிமையோடு ஏற்கும்‌ மனப்பான்மையைக்‌ குறிக்கிறது.

கல்லூரிச் சின்னம்

 

சாவகச்சேரி இந்துக் கல்லூரி

 உதயசூரியன்‌

அப்பொழுது மாணவள்‌ உள்ளத்தில்‌ அடங்கியிருந்த அறிவு வெளிப்படுகிறது. அறிவுக்கு எல்லையில்லை. இறக்கும்‌ வரை தேடினாலும்‌ பூரணமடைந்து விட்டேன்‌ எனச்‌செருக்குக்‌ கொள்ளாமல்‌ எல்லாக்‌ காலங்களிலும்‌ எல்லாப்‌ பொருட்களிலும்‌ இருந்தும்‌ அறிவைத்‌ தேடும்‌ மனப்பான்மை இருக்க வேண்டும்‌ எனப்‌ பாதிச்‌ சூரியன்‌ போதிக்‌கின்றது.

நெற்பயிர்‌ 

மாணவப்‌ பயிர்‌ அந்த நீர்வரம்புள்‌ வளர்ந்து காய்‌ முற்றி தலை குனிந்து. ஒன்றோடு ஒன்று ஒழுங்குபட இணைய முயல்கிறது. உண்மையான கல்வியால்‌ நிறைந்த மாணாக்கர்‌ நிலையைக்‌ காட்டுகிறது. அவர்கள்‌ கல்லூரியின்‌ கட்டுப்பட்டு மதித்து நடப்பதன்‌ மூலம்‌ தாமும்‌ பயன்பெற்று தம்மை அடுத்தவருக்கும் உதவுகின்றார்கள்‌. இவ்வளவையும்‌ தரும்‌ நிறுவனமாக எம்‌ இந்துக்‌ கல்லூரி உள்ளது.

சுவாஸ்திகா குறியீடு 

புலனடக்கம்‌, சிந்தையடக்கம்‌, ஆர்வம்‌ சிரத்தை என்பன சேரும்போது ஆற்றல்‌ மிக்க மக்களை உருவாக்கும்‌ சக்தி மிக்க நிலையமாக இந்துக்‌ கல்லூரி விளங்கும்‌ என்ற ஆர்வத்தை இது காட்டுகிறது. இவை மட்டுமல்ல இதனை உற்றுக்‌ கவனிக்கும் போது இன்னும்‌ பல கல்வித்‌ தத்துவங்கள்‌ இதில்‌ புலனாகும்‌.

கல்லூரிக் கொடி

 

சாவகச்சேரி இந்துக் கல்லூரி

நீலம் அன்பையும் பரந்த மனப்பாண்மையையும் குறிக்கின்றது.

வெண்மைதூய்மையான அறிவொளியைக் குறிக்கின்றது.

மஞ்சள்மங்களம் நன்மை என்பவற்ற குறிக்கின்றது.

logo-yellow

தூரநோக்கு

ஆளுமையும் அறிவாற்றலும் உள்ள நற்பிரஜைகளை உருவாக்குவதன் மூலம் இலங்கையில் ஒரு முன்னணிப் பாடசாலையாக விளங்க வைத்தல்

logo-blue

பணிக்கூற்று

தேசிய கல்விக் கொள்கைகளுக்கு ஏற்ப சகல மாணவர்களையும் வழிப்படுத்தி, சைவத் தமிழ் மரபுகளையும் விழுமியங்களையும் பேணி, நவீனத்துவத்திற்கு முகங்கொடுக்கும் வகையில் அதற்கான பலத்தையும் அர்ப்பணிப்பையும் அவர்களுக்கு வழங்குதல்.

logo-white

நோக்கம்

மாணவர் தேர்ச்சிகளை உச்சப்படுத்தல். ஆசிரியர் தேர்ச்சியை அதிகரித்து அவர்களின் செயலாற்றுகையத் தூண்டுதல். பாடசாலையில் சிறந்த கற்றல் சூழலை உருவாக்குதல்

கல்லூரிக் கீதம்

 

சாவகச்சேரி இந்துக் கல்லூரி

இராகம் : தர்பார்                                                                                        தாளம் : ரூபகம்

பல்லவி

வாழ்க இந்துக் கல்லூரி வாழ்கவே – வாழ்கவே

வாழ்க இந்துக் கல்லூரி வாழ்கவே – வாழ்கவே

அனுபல்லவி

வாழ்க நம்திரு வாழ்க நம் கலை

நாளும் நன்மையும் உண்மையும் ஓங்கவே

(வாழ்க)

சரணம்

அறமும் அன்பும் அருளும் தழைக்க

ஆன்மநேய உணர்வு செழிக்க

உறவு கனிந்தே உயர்வு நிலைக்க

உலகில் புகழும் அறிவும் தரிக்க

(வாழ்க)

– எஸ். எஸ். இரத்தினம் –

0 +
வருடங்கள்
0 +
அதிபர்கள்
0 +
ஆசிரியர்கள்
0 +
மாணவர்கள்