நிதி சேகரிப்பு வேகத்தினை அதிகரிக்கவும், கணக்கின் வெளிப்படைத்தன்மையை பேணவும். அனைவரும் ஒருங்கிணைந்து செயற்படவும் ஏற்றாற்போல் எமக்கான இணையத்தளம் உருவாக்கப்பட்டது
கட்டுமானத்திற்கான பணத்தினை பெறும் நோக்குடன் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
மேலதிகமாக முப்பரிமான தோற்றம், ஏனைய தரவுகளையும் உள்ளடக்கி இறுதி செய்யப்பட்டது.
மேற்படி திட்டத்தின் பரும்படி மதிப்பீட்டு அறிக்கை பெறப்பட்டது. அதன் அடிப்படையில் இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டு தொகை கணக்கிடப்பட்டது. மொத்த தொகை 187,228,690.00
46 வகுப்பறைகளை உள்ளடக்கியாவாறு வரைபடம் தயாரிக்கப்பட்டு, பட்டய பொறியியலாளரினால் உறுதிப்படுத்தப்பட்டு மேலதிக விடயங்களையும் உள்ளடக்கிய ஆவணங்கள் பெறப்பட்டது.
பழைய மாணவர்
சங்க பொதுக் கூட்டம் 21.02.2021 அன்று நடைபெற்றது, அக் கூட்டத்தில் திட்டத்தை முன்னோக்கி
கொண்டு செல்வதற்காக குழு ஒன்று சங்க தலைவரினால் அமைக்கப்பட்டது. இதில் சங்க தலைவர்
திரு ந.சர்வேஸ்வரன், கலாநிதி வி.ஸ்ரீதரன், திரு ந.யதுர்சன் ஆகியோர் அங்கம் வகிப்பதுடன்
தொழிநுட்ப தேவைகளுக்காக திரு ந.சஞ்சேயன் இணைக்கப்பட்டார்.
பாடசாலையின் உட்கட்டுமான வசதிகளை மேலும் அதிகரிக்கும் நோக்குடனும், வகுப்பறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடனும் அனைத்து வசதிகளுடனும் கூடிய புதிய வகுப்பறைக் கட்டடம் ஒன்றை அமைப்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.