99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியானது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டுக்கான 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயம் இன்று (30) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.
இலங்கையைச் சேர்ந்த சுமார் 500 மெய்வல்லுனர்கள் கலந்துகொள்ளும் இப்போட்டியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த முன்னணி மெய்வல்லுனர்கள் பங்குபற்றுகிறார்கள்,
2ஆவது அத்தியாயத்தில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் பங்குகொண்ட எமது வீரர் அருந்தவராசா புவிதரன், தேசிய கோலூன்றிப் பாய்தல் சம்பியனான இஷார சந்தருவனை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
புவிதரனுக்கும், பயிற்றுவிப்பாளர் மற்றும் அதிபர், ஆசிரியர்களுக்கும், கல்லூரி சமூகத்திற்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..!