பிரதி அதிபர் மு. இரவீந்திரன் அவர்கள் அமரத்துவம் அடைந்தார்

கல்லூரியின் பிரதி அதிபரும், எமது சங்கத்தின் உபதலைவருமான அமரர் முத்துராசா இரவீந்திரன் அவர்கள் சுகவீனம் காரணமாக அமரத்துவம் அடைந்தார். அச் செய்தி கேட்டு மிகவும் கவலையடைந்தோம், குறிகிய காலம் எம்மோடு பணிபுரிந்திருந்த்தாலும் அனைவருடணும் இணைந்து செயற்பட்டு எல்லோர் மனங்களிலும் நீங்கா இடம்பிடித்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு, அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் முன்னாள் […]

தேசிய கோலூன்றிப் பாய்தல் சம்பியன்

99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியானது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டுக்கான 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயம் இன்று (30) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. இலங்கையைச் சேர்ந்த சுமார் 500 மெய்வல்லுனர்கள் கலந்துகொள்ளும் இப்போட்டியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த முன்னணி மெய்வல்லுனர்கள் பங்குபற்றுகிறார்கள், 2ஆவது அத்தியாயத்தில் […]

எமது சாதாரண தர பெறுபேறுகள் ஒரே பார்வையில்

அண்மையில் வெளியான சாதாரண தர பெறுபேறுகள், எமது கல்லூரியை பொறுத்தவரையில் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன. சித்தியடைந்த மாணவர்களுக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும் எமது சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

உதவித்தொகை ஒன்றை வழங்கும் செயற்திட்டம்.

எமது பாடசாலையின் கல்வி பயிலும் மாணவர்களில் நெருக்கடியான பொருளாதார நிலையில், இம் முடக்க காலத்தில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள தடுமாறும் குடும்பப் பின்னணியைக் கொண்டவர்களுக்கான உதவித்தொகை ஒன்றை வழங்கும் செயற்திட்டம் எமது சங்கத்தினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பழைய மாணவர்கள் சிலரது பங்களிப்புடன் திரட்டப்பெற்ற உதவுதொகையானது பொருத்தமான பொறிமுறைகள் ஊடாக வகைப்படுத்தி, தீர்மானிக்கப்பட்டு 31 மாணவர்களது குடும்பத்தினருக்கு எமது நிர்வாகத்தினரால் 10.09.2021 வெள்ளிக்கிழமை வழங்கிவைக்கப்பெற்றது. இரண்டம் கட்டமாக […]

க.பொ.த உயர்தரம் 2020 உயர் பெறுபேறுக்கான கௌரவிப்பு நிகழ்வு

க.பொ.த உயர்தரம் 2020 உயர் பெறுபேறுக்கான கௌரவிப்பு நிகழ்வு Zoom தொழில்நுட்பம் ஊடாக நிகழ்நிலையில் இடம்பெற்றது. Topic: Chavakacheri Hindu CollegeTime: May 12, 2021 05:00 PM Mumbai, Kolkata, New Delhi Join Zoom Meetinghttps://learn.zoom.us/j/65354334104?pwd=MWwvMVQ1UStLaTJOVXBZeDFHSlFjQT09 Meeting ID: 653 5433 4104Passcode: CHC@osa21One tap mobile+14086528184,,65354334104#,,,,463352669# US (San Jose) +16465588656,,65354334104#,,,,463352669# US (New York) Dial by […]

2020 உயர்தர பரீட்சைப்பெறுபேறுகள்

2020 ஆண்டு உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களின் பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியிருந்தது. எமது கல்லூரிக்கு தேசிய, மாவட்ட மட்டங்களில் முதலிடம் பெற்றுத்தந்து எமது மாணவர்கள் பெருமை சேர்த்திருந்தார்கள். சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும் எமது சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெருவித்துக்கொள்கிறோம்.

கலைப் பிரிவில் மாவட்டரீதியில் முதலிடம்

எமது கல்லூரியைச் சேர்ந்த மாணவி சற்குணநாயகம் நிலானி கலைப் பிரிவில் தோற்றி மாவட்டரீதியில் முதலிடம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரையும் அவரது ஆசிரியர்களையும் பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

உயர்தர கணிதப்பிரிவில் அகில இலங்கைரீதியில் முதலிடம்

சாவகச்சேரி் இந்துக்கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் உயர்தர கணிதப்பிரிவில் அகில இலங்கைரீதியில் முதலிடம் பெற்றுக்கொண்டுள்ளார்

தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டியில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் முதலிடம்

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டியில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஏ. புவிதரன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

பழைய மாணவர் சங்க அலுவலகம் திறந்து வைத்தல்

கல்லூரியின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்ட பழைய மாணவர் சங்க அலுவலகம் கடந்த 21.02.2021 அன்று கல்லூரியின் பழைய மாணவர்களால் திறந்துவைக்கப்பெற்றுள்ளது.